Skip to main content

கடலை குழம்பு


தேவையான பொருட்கள் :
Ø  கருப்பு கொண்டைக்கடலை - 150 கிராம்
Ø  தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
Ø  வெங்காயம் - 1
Ø  தக்காளி - 1
Ø  பச்சை மிள்காய் -1
Ø  மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
Ø  மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
Ø  சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
Ø  பெருஞ்சீரகத்தூள் - அரைதேக்கரண்டி
Ø  மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
Ø  தேங்காய் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
Ø  கடுகு - 1 தேக்கரண்டி
Ø  கறிவேப்பிலை - 2 இணுக்கு
Ø  உப்பு - தேவைக்கு.
செய்முறை :
v  கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
v  ஊறவைத்த கடலையை குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு போட்டு மூடி 10 விசில் விட்டு, வேக வைத்து எடுக்கவும்.
v  வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
v  ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். அத்துடன் மல்லிப்பொடி, சீரகப்பொடி, பெருஞ்சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து லேசாக வறுத்து ஆற வைக்கவும்.
v  வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
v  கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
v  வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
v  தக்காளி நன்றாக வதங்கி கூழ் பதம் வந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவைக்கு தண்ணீர்(கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீர்) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
v  நன்கு கொதிவரவும், வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து உப்பு சரிபார்க்கவும்.
v  அடுப்பை மிதமான தீயில் வைத்து குழம்பு கெட்டித்தனமை தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து திக்கான பதம் வந்ததும் இறக்கவும்.

v  சுவையான சத்தான கடலை குழம்பு ரெடி.

Comments