தேவையான பொருள்கள் :
- பால் பவுடர் - 2 1/2 கப்
- பால் - தேவையான அளவு (கலப்பதற்கு)
- நெய் (அ) டால்டா - 2 மேசைக்கரண்டி
- சர்க்கரை - 5 கப்
- பேக்கிங் பவுடர் - சிறிது
- மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
- நெய் (அ) எண்ணெய் - அரை கப் (பொரிப்பதற்கு)
செய்முறை :
- பால் பவுடருடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், நெய் (அ) டால்டா சேர்த்து, தேவைக்கேற்ப பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 5 கப் சர்க்கரையைப் போட்டு, அத்துடன் 5 கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
- மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் காயவிடவும்.
- காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும்.
- அனைத்து உருண்டைகளையும் போட்ட பிறகு, 5 நிமிடங்கள் கழித்து பாகு இருக்கும் அடுப்பை அணைக்கவும்.
- டேஸ்டி குலாப் ஜாமுன் ரெடி.
- குறைந்தது 3 - 4 மணி நேரம் வரை குலாப் ஜாமூன் பாகில் ஊற வேண்டும்.
Comments
Post a Comment