Skip to main content

சுவையான காலிபிளவர் மசாலா குழம்பு


காலிபிளவர் குழம்பு செய்ய தேவையானவை

  1. காலிபிளவர் – 1,
  2. உருளைக்கிழங்கு – 3,
  3. தக்காளி – 4,
  4. பச்சைப் பட்டாணி – ¼ கோப்பை,
  5. பெரிய வெங்காயம் – 2,
  6. உப்பு, கொத்துமல்லி – தேவையான அளவு,

அரைக்க:

  1. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி,
  2. தனியாத்தூள் – ½ தேக்கரண்டி,
  3. சோம்பு – ½ தேக்கரண்டி,
  4. இஞ்சி – ஒரு துண்டு,
  5. பூண்டு – 6 பற்கள்,
  6. தேங்காய்த் துருவல் – 3 மேசைக்கரண்டி,
  7. பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி.

காலிபிளவர் குழம்பு செய்வது எப்படி
  • முதலில், காலிபிளவரைத் தனித்தனிப் பூவாக உதிர்த்து உப்பு நீரில் போட்டுக் கழுவிக் கொள்ளவும். 
  • உருளைக்கிழங்கைத் தோல் சீவி, சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். 
  • பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். 
  • பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகப் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். 
  • பிறகு, பாத்திரத்தை வைத்து, எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம் சேருங்கள். 
  • வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி, காலிபிளவர், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, தேவையான உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். 
  • பிறகு, இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து, காலிபிளவர், உருளைக் கிழங்கு, பட்டாணி வேகும் வரை கொதிக்க விட வேண்டும். 
  • பின்னர், அரைத்த விழுதைப் போட்டு, ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவேண்டும். 
  • 10 நிமிடம் குழம்பு கொதித்ததும், கொத்துமல்லியைத் தூவி இறக்குங்கள். 
  • சுவையான காலிபிளவர் மசாலா குழம்பு தயார்.


Comments