Skip to main content

ஓட்ஸ் பனீர் பீஸ்


தேவையானவை :
v  வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - அரை கப்

v  துருவிய பனீர் - அரை கப்

v  வேகவைத்து மசித்த உருளைகிழங்கு - 2

v  பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்

v  பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்

v  இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்

v  பால் - ஒரு டேபிள்ஸ்பூன்

v  ஓட்ஸ் - கால் கப்

v  எண்ணெய், உப்பு - தேவையான அளவு


செய்முறை :
  • ஓட்ஸை வெறும் வாணலியில் பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும். 
  • ஒர் அகலமான பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பனீர், கொத்தமல்லித்தழை, இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது, ஓட்ஸ், உப்பு எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்துகொள்ளவும். 
  • பிறகு பாலை சேர்த்து பிசைந்து விருப்பப்பட்ட வடிவங்களில் பிடித்து, தவாவில் எண்ணெய் விட்டு, சுட்டு எடுக்கவும்.






Comments