Skip to main content

மாதுளை தோல் ஃபேஸ் பேக்



  • மாதுளையை சாப்பிட்ட பின், அந்த தோலை தூக்கி எறியாமல், சிறு துண்டுகளாக்கி வெயிலில் 2-3 நாட்கள் உலர்த்தி
  • பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு அடைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்: 

  1. மாதுளை பொடி 1 டேபிள் ஸ்பூன், 
  2. தேன் 1 டேபிள் ஸ்பூன், 
  3. எலுமிச்சை சாறு 2-3 துளிகள், 
  4. தயிர் 1 டேபிள் ஸ்பூன், 
  5. தக்காளி சாறு 1 டேபிள் ஸ்பூன், 
  6. பால் 2 டேபிள் ஸ்பூன். 


செய்முறை: 

  • மாதுளை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து பின் தயிர், பால், தக்காளி சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • அவ்வாறு கலந்து வைத்துள்ள பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். 
  • இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்குவதோடு, அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரித்து வெளிக்காட்டும்.


Comments