Skip to main content

சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்


தேவையான பொருள்கள் :

கத்தரிக்காய் – 6
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி 
கடலை மாவு – 2 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி 
உப்பு – தேவையான அளவு 
எண்ணெய் – தேவையான அளவு

வறுத்து பொடிக்க :

தனியா – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1ஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :


  •  கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்து சற்று கொரகொப்பாக பொடித்து கொள்ளவும்.
  • கத்தரிக்காயை வட்டவட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • அடுத்து தண்ணீரை வடித்து விட்டு அதன் மேல் மிளகாய் தூள், கடலைமாவு, மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கத்தரிக்காயின் மேல் எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெயை ஊற்றவும்.
  • தோசை கல் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கத்தரிக்காய் துண்டுகளை பொடித்து வைத்த மசாலாவில் பிரட்டி தோசை கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விடவும். 2 நிமிடம் ஆனதும் திருப்பி போடவும்.
  •  இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா கத்தரிக்காய் துண்டுகளையும் இதே முறையில் வறுத்து எடுக்கவும்.
  • சுவையான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல் ரெடி.

Comments